தாய்த் தமிழகமே ஆதரவுக்கரம் தந்து அரவணைத்துக்கொள்:
"விடுதலைப்போரின் விருட்சமே நாடு கடந்த தமிழீழ அரசு" உருத்திரகுமாரன் அறைகூவல்!
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்கான ஒரு அரசியற் கட்டமைப்பு. இது சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசை அமைப்பதற்காகப் பாடுபடும். இவ் அரசாங்கம் ஒரு வலுமையமாக உருவாகுவதற்கு உலகளாவிய தமிழ்மக்களின் ஆதரவும் குறிப்பாகத் தமிழக மக்களது ஆதரவும் அரவணைப்பும் அவசியமானவை என தாய்த் தமிழகத்துக்கு அறைகூவல் விடுத்திருக்கும் உருத்திரகுமாரன் தனது வேண்டுகோளில் ஈழத் தமிழ் மக்களின் அரசியற் பெருவிருப்பான தமிழீழத் தனியரசினை தாயகம், தேசியம், சுயநிர்ணயம், இறைமை போன்ற உரிமை நிலைக் கோட்பாடுகளின் வழி நின்று – தமிழக மற்றும் இந்திய மக்களினதும் அனைத்துலகசமூகத்தினதும் அதரவுடன் வென்றெடுக்கும் நோக்குடன் ஜனநாயக விழுமியங்களுக்குட்பட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டு வருவதனைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள். எனத் தெரிவித்திருக்கும் அவர் இந் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்குத் தங்கள் ஆதரவினை வேண்டியே இம் மடலினை வரைகிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.
CLICK ON:இது தொடர்பாகத் தாய்த் தமிழகத்துக்கு அவர் எழுதிய மடல் வருமாறு
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்கான ஒரு அரசியற் கட்டமைப்பு. இது சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசை அமைப்பதற்காகப் பாடுபடும். இவ் அரசாங்கம் ஒரு வலுமையமாக உருவாகுவதற்கு உலகளாவிய தமிழ்மக்களின் ஆதரவும் குறிப்பாகத் தமிழக மக்களது ஆதரவும் அரவணைப்பும் அவசியமானவை
Wednesday, 21 April 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment